தமிழ்ப்புலமை பெறப் பட்டப்படிப்புப் படிக்கும் மாணாக்கர்களுக்கு இயற்றமிழ் என்னும் மூன்றிலொரு பங்குத் தமிழ் மட்டுமே கற்பிக்கப்படுகிறது, அதனைக் கற்று அவர்கள் அரைகுறைத் தமிழ்ப் புலவர் களாகவே வெளிவருகின்றனர், அவர்களை அரைத் தமிழ்ப்புலவர்கள் என்றுகூடச் சொல்ல முடியாது. மற்ற இரண்டு தமிழ்களையும் கற்றால் மட்டுமே அவர்களைத் 'தமிழ் முழுதறிந்த தன்மையர்' (சிலம்பு. அரங்கேற்று. 38) என்று இளங்கோவடிகள் சொல்வதுபோல், முழுத்தமிழ்ப்புலவர்கள் என்று சொல்லமுடியும்.
முத்தமிழ்
இசை நாடகம் என்னும் கலைகளையும் உள்ளடக்கிய ஒரே மொழி நமது தமிழ்மொழி. அதனால்தான் அது 'முத்தமிழ்' எனப்படுகிறது. நம்மில் சிலர், முத்தமிழ் என்பது தமிழ் மொழியின் வேறொரு பெயர் என்று மேற்போக்காக நினைக்கிறார்கள். அதை முத்தமிழ் என்று ஏன் குறிப்பிடுகிறார்கள்? என்று அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. வேறு சிலர் முத்தமிழ் என்பன இயல், இசை, நாடகம் என்று தெரிந்து வைத்திருந்தாலும், அவற்றில் இசை என்பது இசைக்கலை என்றும், நாடகம் என்பது மேடை நாடகம் என்றும் கருதுகிறார்கள். யாழ், குழல் முதலிய இசைக்கருவிகளில் கிடைப்பது வெறும் இசையே. அதில் தமிழ் இல்லை. எனவே அது இசைத்தமிழ் ஆகாது. அதுபோல் உரையாடல் பேசி நடிக்கும் இன்றைய மேடை நாடகம் வெறும் நடிப்புக் கலையே, அது நாடகத்தமிழ் ஆகாது. மூன்று தனித்தனி இயல்புடைய தமிழ்களையே முன்னோர் முத்தமிழ் என்று குறித்தனர்.
மேலும் படிக்க
Saturday, August 30, 2008
உலகாய்தம் பெயர்க்காரணம் - முனைவர் க.நெடுஞ்செழியன்
மனித வாழ்வை அடித்தளமாகக் கொண்டதோர் உலகியல் கோட்பாடே உலகாய்தம். இந்திய மெய்ப்பொருள் வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகக் குறிக்கப்படுவதைப் போன்றே தமிழகத்தில் வழங்கிய மெய்ப்பொருள்களிலும் காலத்தால் மிகவும் முந்தியதாக இக்கோட்பாடு திகழ்ந்துள்ளது.
இக்கோட்பாட்டிற்கெனத் தனியாக நூல்கள் வழங்கி வந்ததாகவும், அரசர்கள் கற்க வேண்டிய தலையாய கல்வித் துறைகளை இது உள்ளடக்கி இருந்ததாகவும் ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். இருப்பினும் இக்காலத்தில் உலகாய்தத்தை அடிப்படையாகக் கொண்ட மூலநூல்கள் ஏதும் இல்லை. கிடைக்கும் சான்றுகள் அனைத்தும் இதனை எதிர்த்தோரும் மறுத்தோரும் குறித்துள்ள குறிப்புகளாகவே உள்ளன.

இனமும் மொழியும் இரு கண்கள்; இல்லாவிட்டால் வெறும் புண்கள்! - 3 - முனைவர் தமிழப்பன்
காவிரிச் சிக்கலில் தமிழக ஆட்சியர்கள் நடந்துகொண்ட முறைகள் வெட்கக் கேடானவை; கேலிக்கூத்தானவை, தும்பை விட்டு வாலைப் பிடித்துக்கொண்டார்கள். அதனால் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் பட்டபாடு. இழந்த இழப்புகள் கொஞ்ச நஞ்சமா? 490 கோடி கன அடி எங்கே? அதன்பின் 390 அதுவும் குறுகி. 195 ஆனதேன்? இந்திராகாந்தி சொன்னதற்காக உச்ச நீதி மன்ற வழக்கைத் திரும்பப்பெற்ற கொடுமையால் நிகழ்ந்தது? எதனால் நிகழ்ந்தது? எதற்காக நிழகழ்ந்தது? இனவுரிமை பற்றி எள்ளளவாவது எண்ணியிருந்தால் இப்படியெல்லாம் செய்திருப்பார்களா? எந்த இனத்துக்காரனாவது இந்தியாவிலாகட்டும் பிற நாடுகளிலாகட்டும், தன் இனத்தைக் காட்டிக்கொடுத்திருக்கிறானா? கொடுத்திருப்பானா? தன்னலத் திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் இன உரிமையை விட்டுக் கொடுத்தவர்களை இனக்காவலர் என்று கூறும் கொடுமை இங்குத்தானே நடந்து கொண்டிருக்கிறது? அடுக்கு மொழியாலும் மயக்கு மொழியாலும் தமிழர்களை ஏமாற்றிவரும் நிலையை என்னென்பது? தமிழக மக்களை ஏமாறிகளாகவும் இளிச்ச வாயர்களாகவும் பிற மாநிலத்தவர் எண்ணச் செய்தவர் யார்? அதற்கு இடங்கொடுத்தவர் யார்? இந்த அரசியல்வாதிகளால் தானே இந்த அவப்பெயர் தமிழர்க்கு வாய்த்தது. எழுச்சி வரும் போது எதையாவது சொல்லி மழுங்கடிக்கும் செயலைச் செய்தது யார்? செய்வது யார்?
இயல்பாகவே தமிழினம் இப்படிப்பட்டது தானா? புறநானூற்று வீரமெல்லாம் போனதெங்கே? தமிழரை வழி நடத்த வாய்த்த தலைவர்கள் தடம் மாறியதால்-தடுமாறியதால் அல்லவா இந்தத் தலைக்குனிவு அரசன் எவ்வழி அவ்வழி தானே குடிகள்? தளபதியின் எண்ணப்படித்தானே படைகளின் செயற்பாடு அமையும். தமிழினத்தைலைவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்; இல்லையேல் தடுக்க வேண்டிவரும் அதற்கு நாம் செய்யவேண்டியதென்ன?
நடுநிலைக் கண்ணோட்டத்தோடு அரசியற் செயற்பாடுகளை ஆட்சி நடவடிக்கைகளை ஆய்வு செய்து உண்மையை எடுத்துக்கூறும் துணிவும் நமக்கு வரவேண்டும் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்ற பெருமகனின் செம்மாந்த கொள்கையை மேற்கொள்ள என்ன தயக்கம்? தயக்கமும் மயக்கமும் தமிழினத்தைச் சீர்குலைத்துவிடும் என்பதைத் தெளிதல் வேண்டும்.

சிதைந்த சொல் வடிவங்கள் மக்கள் மொழி ஆகா - ம.இலெ.தங்கப்பா
தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ள விரும்பும் வேற்றுமொழிக்காரர்கள் -குறிப்பாக மேலை நாட்டினர் நாம் எழுதும் தமிழுக்கும் பேசும் தமிழுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு கண்டு குழப்பம் அடைகின்றனர். தமிழைத் திருத்தமாக எழுதும் நாம் அதைத் திருத்தமாகப் பேசுவதில்லை. 'பன்றி' என்று எழுதுகிறோம். பன்னி, அல்லது பண்ணி என்று பேசுகிறோம். பன்னிரண்டு பேச்சில் பன்னெண்டு ஆகிறது. இங்கே அங்கே என்பதைச் சிலர் இங்கன, அங்கன என்றும், சிலர் இங்கிட்டு அங்கிட்டு என்றும் பேசுகின்றனர். அவர்கள், இவர்கள் என்பவை அவுக இவுக என்றும், அவங்க இவங்க என்றும், அவாள் இவாள் என்றும் அவிய, இவிய என்றும் வட்டாரங்களில் உருமாறுகின்றன. திருந்திய தமிழைக் கற்றுக் கொண்ட பிறமொழியினருக்கு நாம் பேசுந்தமிழ் புரியவில்லை. இது முற்றும் வேறு மொழி போலிருக்கின்றதே என்கின்றனர்.
பல மொழிகளில் இந்த வேறுபாடு காணப்படுவதுதான் என்றாலும் தமிழில் இது மிக அதிகமாயிருக்கிறது.
பேசுவதுபோலவே எழுதவும் வேண்டும் என்பது ஒரு பொதுவான மொழியியல் விதி. அதுதான் மக்கள் மொழியின் அடையாளம் என்கின்றனர்.

உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து - 2 நாம் தமிழர் என்கின்ற உணர்வு எப்பொழுதும் இருக்கக் கூடாதா? - தேவமைந்தன்
உலகத் தமிழர் நல வாழ்வுக்காக ஆதரவு தேடி, பல இடங்களுக்கும் சென்று வந்தனர் சிலர். போகிற போக்கில் கல்லூரி ஒன்றைக் கண்டு, உள்ளே நுழைந்து முதல்வரின் இசைவு பெற்று முதலாவதாக அவர் அறைக்கு அருகில் இருந்த துறையொன்றுக்குள் நுழைந்தனர். அது அறிவியல் துறை. துறைத் தலைவராக வீற்றிருந்தவரிடத்தில் சென்று, தாம் வந்த நோக்கத்தைத் தெரிவித்தனர்.
விழிகளில் வியப்புப் பொங்க, புருவங்களை நெறித்தவாறு அவர் சொன்னார்: "நீங்க தப்பா இங்க நுழைஞ்சிட்டேங்க.. இது தமிழ் டிபார்ட்மெண்ட் இல்லே.. சயின்ஸ்..."
போனவர்களுக்கோ அதிர்ச்சி. "ஐயா! நாங்கள் தமிழர்கள் நலவாழ்வு தொடர்பாக ஆதரவு தேடி வந்தோம்..இதில் துறை வேறுபாடு கிடையாது... இதோ பாருங்கள்..எங்களுக்குள் மருத்துவர் உள்ளார்..பொறியியல் வல்லுநர் உள்ளார்..தமிழர்தாமே நாமெல்லாரும்.." என்று அவர்களுள் மூத்தவர் சொன்னார். பிறகு அங்கு என்ன உரையாடல்கள் நடைபெற்றன என்பதை இங்கு நாம் சொல்ல வேண்டுவதில்லை.

அனைத்துலகக் குற்றவியல் அறமன்றம் முன் இனப்படுகொலை புரிந்தோர் தண்டனை பெறும் நாள் வருக! - நந்திவர்மன், பொதுச்செயலாளர், திராவிடப்பேரவை
இனப்படுகொலை என்பதன் விளக்கங்களுள் பண்பாட்டுப் படுகொலையும் அடங்கும். தமிழர்கள் மட்டுமே பண்பாட்டுப் படுகொலை பற்றி ஒப்பாரி வைப்பார்கள் என எழுத்துக் கிறுக்கர்கள் ஏடுகள் தோறும் ஊடுருவி உளறி வைப்பது வழக்கம். கொரிய நாட்டை சப்பானிய நாடு அடிமைப்படுத்தி கொரிய மொழியையும் பண்பாட்டுப் படுகொலையை டோக்கியோ பல்கலைக்கழக ஆய்வு மாணவி திருவாட்டி மட்சுமரா தமது ஒப்பீட்டு ஆய்வில் பதிவு செய்துள்ளார்.
தமிழ்ப் பண்பாட்டுக் காவலரணாக தெளிதமிழ், தமிழ்க்காவல் உள்ளிட்ட ஏடுகள் விளங்குவது போல 1898 - 1910 க்குமிடையே கொரிய மொழியை பண்பாட்டைப் பாதுகாக்க அவாங்சன் சின்மன் என்ற ஏடு சப்பானிய எதிர்ப்பலைகளைக் கிளப்பிற்று. அதை எதிர்தகொள்ள புற்றீசல் போல கொரிய மொழி ஏடுகளை சப்பானியர்கள் பின்னிருந்து இயக்கினார்கள். தமிழருக்கெதிரான கருத்துப்பரப்பும் பணியில் தமிழரல்லாதார் ஈடுபட்டுள்ள இன்றைய நிலை, கொரிய மக்கள் விழித்தெழந்து பல்லாண்டாகியும் தமிழர் வழித்திட வில்லை என்பதை வெள்ளிடை மலையென விளக்குகிறது.
பேசுவதுபோலவே எழுதவும் வேண்டும் என்பது ஒரு பொதுவான மொழியியல் விதி. அதுதான் மக்கள் மொழியின் அடையாளம் என்கின்றனர்.
மேலும் படிக்க
தமிழ்ப் பண்பாட்டுக் காவலரணாக தெளிதமிழ், தமிழ்க்காவல் உள்ளிட்ட ஏடுகள் விளங்குவது போல 1898 - 1910 க்குமிடையே கொரிய மொழியை பண்பாட்டைப் பாதுகாக்க அவாங்சன் சின்மன் என்ற ஏடு சப்பானிய எதிர்ப்பலைகளைக் கிளப்பிற்று. அதை எதிர்தகொள்ள புற்றீசல் போல கொரிய மொழி ஏடுகளை சப்பானியர்கள் பின்னிருந்து இயக்கினார்கள். தமிழருக்கெதிரான கருத்துப்பரப்பும் பணியில் தமிழரல்லாதார் ஈடுபட்டுள்ள இன்றைய நிலை, கொரிய மக்கள் விழித்தெழந்து பல்லாண்டாகியும் தமிழர் வழித்திட வில்லை என்பதை வெள்ளிடை மலையென விளக்குகிறது.
பேசுவதுபோலவே எழுதவும் வேண்டும் என்பது ஒரு பொதுவான மொழியியல் விதி. அதுதான் மக்கள் மொழியின் அடையாளம் என்கின்றனர்.
மேலும் படிக்க
நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் - சிவா சின்னப்பொடி
"எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;" - இது பொலீவிய புரட்சிக்களத்தில் சேகுவேரா உதிர்த்த வார்த்தைகளாகும்.
இது இன்றைக்கு எமது தாயக போர்களத்திலும் நிரூபணமாகி இருக்கிறது
விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றல் சிதைக்கப்பட்டவிட்டது. அவர்களுடைய கடைசி தளப் பிரதேசமான கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் அடுத்த மாவீரர் தினத்துக்கு முன்னர் பிடித்துவிடுவோம். கிளிநொச்சிக்கு இன்னமும் 15 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது. முல்லைத்தீவுக்கு இன்னுமும் 25 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது.
வன்னியின் அடர்ந்த காட்டின் நடுவிலுள்ள பங்கர்களுக்குள் தான் அவர்கள் இந்த வருட மாவீரர் தினத்தை நினைவு கூரவேண்டும். அவர்களுடைய விமானங்கள் வான்பரப்பில் மேலெழுவதற்கு முன்னரே எங்களது ராடர்களில் அவற்றை கண்டுபிடித்து அழித்துவிடுவோம். என்றெல்லாம் சிறீலங்கா அரசு செய்த வந்த பரப்புரைகளை குறிப்பாக நாளாந்தம் விடுதலைப்புலிகளின் இழப்புகள் தொடர்பான அரசாங்கம்; வெளியிட்ட எண்ணிக்கைகளை தென்பகுதி சிங்கள மக்கள் நம்பி பால்சோறு பொங்கி கொண்டாடினாலும் சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டே பார்த்தன.

Subscribe to:
Posts (Atom)