Showing posts with label தமிழீழம். Show all posts
Showing posts with label தமிழீழம். Show all posts

Saturday, August 30, 2008

நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் - சிவா சின்னப்பொடி

"எதிரியின் ஓராயிராம் பொய் பரப்புரைகளை புரட்சியாளர்களின் ஒரே ஒரு வெற்றிகரமான தாக்குதல் ஒரு சில நிமிடங்களில் முறியடித்துவிடும்;" - இது பொலீவிய புரட்சிக்களத்தில் சேகுவேரா உதிர்த்த வார்த்தைகளாகும்.

இது இன்றைக்கு எமது தாயக போர்களத்திலும் நிரூபணமாகி இருக்கிறது

விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றல் சிதைக்கப்பட்டவிட்டது. அவர்களுடைய கடைசி தளப் பிரதேசமான கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் அடுத்த மாவீரர் தினத்துக்கு முன்னர் பிடித்துவிடுவோம். கிளிநொச்சிக்கு இன்னமும் 15 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது. முல்லைத்தீவுக்கு இன்னுமும் 25 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கிறது.

வன்னியின் அடர்ந்த காட்டின் நடுவிலுள்ள பங்கர்களுக்குள் தான் அவர்கள் இந்த வருட மாவீரர் தினத்தை நினைவு கூரவேண்டும். அவர்களுடைய விமானங்கள் வான்பரப்பில் மேலெழுவதற்கு முன்னரே எங்களது ராடர்களில் அவற்றை கண்டுபிடித்து அழித்துவிடுவோம். என்றெல்லாம் சிறீலங்கா அரசு செய்த வந்த பரப்புரைகளை குறிப்பாக நாளாந்தம் விடுதலைப்புலிகளின் இழப்புகள் தொடர்பான அரசாங்கம்; வெளியிட்ட எண்ணிக்கைகளை தென்பகுதி சிங்கள மக்கள் நம்பி பால்சோறு பொங்கி கொண்டாடினாலும் சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தேகக் கண் கொண்டே பார்த்தன.

மேலும் படிக்க

வன்னி இடப்பெயர்வு ஏற்படுத்தியிருக்கும் பாரிய மக்கள் அவலம்

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப் படும் வலிந்த தாக்குதல்கள், நில ஆக்கிரமிப்புக்கள், எறிகணைத் தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக வன்னியின் மேற்குப் பகுதியில் பாரிய மக்கள் அவலம் ஏற்பட்டுள்ளது.

மன்னாரின் மடு உதவி அரச அதிபர் பிரிவைச் சேர்ந்த அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து விட்டனர். மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்த 50 விழுக்காட்டு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த சுமார் 25 ஆயிரம் பேர் மன்னாரின் எல்லைப் பிரதேசங்களான தேவன்பிட்டி-வெள்ளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்கின்றனர்.

மேலும் படிக்க